அகமதாபாத்,

ராமர் பாலம் அமைக்க அந்த காலத்தில் அணில்கள்தான் செங்கல் சுமந்தது என்றும், இராமாயண அம்புகள் இஸ்ரோவின் ஏவுகணைகளுக்கு இணையானவை என்று அறிவியலுக்கு புறம்பாக கட்டுக்கதைகளை அவிழ்தது விட்டு வருகிறார் குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி. அவரது கருத்துக்கு அறிவியல் அறிஞர்கள் சிலர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
குஜராத் அரசின் தன்னாட்சி பல்கலைக்கழகமான IITRAM-இல் பொறியியல் மாணவர்களுக்கு பட்டமளிக்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற குஜராத் முதலமைச்சர் விஜய் ருபானி பேசியதாவது: –
பழங்கால இந்தியர்கள் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கினர், ராமர் பயன்படுத்தியதாக ராமாயணத்தில் குறிப்பிடப்படும்  அம்புகள் ஒவ்வொன்றும் இன்று இஸ்ரோ உருவாக்கும் ஏவுகணைகளுக்கு இணையானவை என்று குறிப்பிட்டார். ஏராளமானோர் ஆரவாரத்துடன் குஜராத் முதலமைச்சரின் பேச்சை கைத்தட்டி வரவேற்றனர். பார்வையாளர்கள் வரிசையில் இஸ்ரோ இயக்குநர் தபன் மிஸ்ரா உள்ளிட்டோரும் அமர்ந்திருந்தனர்.

ராமரின் எண்ணத்தில் உதித்த மாபெரும் பொறியியல் அற்புதமான ராமர் சேது போன்ற மிகப்பெரிய பாலத்தை அக்கால பொறியாளர்கள் கட்டியுள்ளனர் என்று குறிப்பிட்ட குஜராத் முதலமைச்சர், ராமர் சேது பாலத்தின் மீதங்கள் தற்போதும் கடலில் உள்ளதாக மக்கள் குறிப்பிடுவதாகவும், அணில் உள்ளிட்டவைக்கூட இவ்வளவு பெரிய பொறியியல் கட்டுமானத்தில் பங்களித்துள்ளதாக தெரிவித்தார்.

இலஷ்மணன் போரில் மயங்கி விழுந்த போது அவரை காப்பாற்ற மூலிகையை கொண்டுவரப்பட்டது என குறிப்பிட்ட விஜய் ருபானி, வடக்கில் இத்தகைய மூலிகைகள் உள்ளதை ஆய்வாளர்கள் அறிவார்கள் என்றும், அந்த மூலிகை எதுவென கண்டுபிடிக்க முடியாத அனுமார் மலையையே பெயர்த்து வந்தார் எனில், எந்த வகையான தொழில்நுட்பங்கள் அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அன்றைய நாளில் சிறப்பான சமூக கட்டமைப்பை ராமர் உருவாக்கியிருந்ததாக கூறிய முதல்வர் விஜய் ருபானி, அனைத்து சாதியினரும் சமமாக வாழ்வதற்கான நடவடிக்கைகளை ராமர் எடுத்ததாகவும், ஆதிவாசிகளின் நம்பிக்கையையும் அவர் பெற்றிருந்ததாகவும், அனுமன், சுக்ரிவன் போன்ற குரங்கினங்கள் ராணுவத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் இது சிறந்த சமூக கட்டுமானம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
குஜராத் மாநில முதல்மைச்சரின் அறிவியலுக்கு புறம்பான கருத்துக்களுக்கு அறிவியல் அறிஞர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: