பீஹார் தேர்தலின் போது நிதிஷ் குமார் ஒரு பாபாவின் ஆசி பெற்றவர் என்று பிரச்சார மேடையில் அவரைக் கிண்டல் செய்தார் மோடி. அதற்கு பதிலடியாக மோடியும் அசாராம் பாபு என்கிற சாமியாரும் மேடையில் பாடும் பழைய வீடியோவை வெளியிட்டது நிதிஷ் தரப்பு.

நிற்க, 2013இல் 16 வயதுப் பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அசாரம் கைது செய்யப்பட்டார். இப்போது ராஜஸ்தான் சிறையிலிருக்கிறார். அதற்குப் பின் அசாராமும் அவரது மகனும் இரு பெண்களை பாலியல் வன்புணர்வு செய்தனர் என்றும் ஒரு வழக்கு இருக்கிறது. 

முதல் வழக்கில் பாதிக்கப்பட்ட பெண் உட்பட பல சாட்சிகள் இன்று வரை விசாரிக்கப் படவில்லை. இரு சாட்சிகள் கொல்லப் பட்டிருக்கின்றனர்.
அசாராமின் பெயில் விண்ணப்பத்தை விசாரித்து வரும் உச்சநீதி மன்றம் நேற்று இந்த வழக்கை ஏன் விசாரிக்கமல் தாமதப்படுத்துகிறீர்கள் என்று குஜராத் அரசை சாடியிருக்கிறது. பாஜகவினர் அசாராமை ஆதரிக்கக் கூடாது என்று மோடியும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார் என்ற செய்தியும் இருக்கிறது.

இப்போது மோடியும் நிதிஷும் நண்பர்கள்!
மோடியும் அசாராமும் பாடும் இந்த வீடியோ வேடிக்கையானது.

  • Vijayasankar Ramachandran

Leave A Reply

%d bloggers like this: