மக்கள் பாடகனே…

உனை மறத்தல் அரிது. எனது மூத்த மகளுக்கு ‘ ஆத்தா உன் சேலை’ என்று தாலாட்டியவன் நீ தான். ‘பத்துத் தல ராவணணை ஒத்தத் தலை ராமன் வென்றான். மொத்தத்தில வீரம் வேணும்’ என்றெமை ஊக்கப்படுத்தியவன் நீ தான்.

என் மகன் சூர்யாவிற்கும், சத்யாவிற்கும், ‘ ஊரு ஓரம் தோட்டத்திலே, ஒருத்தன் போட்டான் மொந்தன் வாழை’ என்று கானக்கதை சொன்னவன் நீயன்றோ….

நண்பர்களின் சாதி மறுப்புக் காதலுக்கு, ‘ஊரடங்கும் சாமத்திலே நான் ஒருத்தி மட்டும் தனிச்சிருந்தேன்’ பாடலை உன் அமுதக்குரலில் அறிமுகம் செய்தேன்’

அன்பினிய தமிழ்த்தேசிய நண்பர்க்கு, ‘தமிழா… நீ பேசுவது தமிழா!’ எனும் வைரக்குரலை காசி ஆனந்தன் கவிக்கு கம்பீரம் சேர்த்ததை கேடயமாக்கினேன்…

மக்கள் குரலாய், மார்க்சிஸ்ட் கட்சிக்கு அணிசெய்த கானக்கவியே, உன்னை மறத்தல் அரிது, உன் இழப்பு கொடிது!

-சூர்யா, கோவை.

Leave A Reply