மும்பை: வடமாநிலங்களில் தூங்கும் பெண்களின் தலைமுடியை மர்ம நபர்கள் வெட்டி வீசும்  சம்பவம் அதிகரித்து வருவதால் பெண்கள் பீதியடைந்துள்ளனர்.

திரைப்படங்களில் வரும் காட்சிகளை போல தூங்கும் பெண்களின் தலைமுடியை வெட்டும் சம்பவம் வடமாநிலங்களில் அதிகரித்து வருகின்றது. முன்னதாக தில்லி, ஹரியானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த சம்பவம் அதிக அளவில் நடைபெற்று வந்தன. இந்த மாநிலங்களை தொடர்ந்து தற்போது மகாராஷ்டிரா மாநிலத்தில் இது போன்ற செயலில் மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அவுரங்காபாத்தில் ஒரே நாளில் இருவேறு இடங்களில் தூங்கும் பெண்களின் தலைமுடியை மர்ம நபர்கள் வெட்டியுள்ளனர். இதனைத் தொடர்ந்து காலையில் எழுந்து பார்த்த பெண்கள் தங்களின் தலைமுடி வெட்டப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து காவல்துறையினரிடம் ஊர் மக்கள் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி பெண்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply