* மேற்கத்திய கலாச்சாரமான காதலர்கள் தினத்திற்கு எதிராக தொடர்ந்து பேசி வருபவர் ஆசாராம் பாப்பு, இந்த நாளை இந்தியர்கள் கொண்டாட கூடாது அதற்கும் பதில் நாம் நம் பெற்றோரை வணங்கும் நாளாக அதை கடைபிடிக்க வேண்டும் என்றார். உடன் ஆசாராம் பாப்புவின் யோசனையை ஏற்று பாஜக ஆளும் மாநிலங்களில் இது பின்பற்றப்பட்டது. பள்ளிகளில் கல்லூரிகளில் பெற்றோரை அழைத்து அவர்களின் காலை கழுவுவது, காலில் விழுவது என சடங்குகளை புதிதாய் செய்ய நிர்பந்தித்தனர்.

* தில்லி பலாத்கார சம்பவத்தில் நிர்பயாவும் பலாத்காரம் செய்தவர்களை போலவே குற்றவாளியே, அவள் அவர்களை அண்ணண் என்று அழைத்திருந்தால் இந்த பலாத்காரம் நிகழ்திருக்காது. ஒரு கையால் ஓசை எழுப்ப இயலாது, ஒரு பெண் ஒத்துழைக்காமல் பலாத்காரம் நிகழாது என்றார்.

*மோட்ரியாவில் ஆசாராம் பாப்பு நடத்தும் குருகுல பள்ளியில் (Residental Schools) 2008 ஜூலை மாதத்தில் இரண்டு சிறுவர்களை காணவில்லை, இரு தினங்களுக்கு பிறகு அந்த சிறுவர்களின் சடலங்கள் ஆசிரமம் அருகில் சாபர்மதி நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்டது. இந்த ஆசிரமங்களில் ஆசாராம் பாப்பு தாந்திரீக வேலைகளில் ஈடுபடுவார் என்பதும் அப்படி இந்த நடவடிக்கைகளில் செய்ய சடலங்கள் தேவை என்பதான தகவல்கள் வெளியானது. ஆனால் இந்த மாணவர்களின் பெற்றோரை காவல்துறை மிரட்டி புகார் அளிக்க விடாமல் விரட்டியது.

* அதே 2008 ஜூலை மாதத்தில் ஆசாராம் பாப்புவின் சிந்துவாரா ஆசிரமத்தில் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஆசிரம பள்ளியில் கழிப்பறை அருகே ஒரு நர்சரி மாணவனின் சடலம் கிடைத்தது. இவை அனைத்திற்கும் ஆசாராம் பாப்புவிற்கு எந்த தொடர்பும் இல்லை என பெற்றோரே வாக்குமூலம் அளித்தனர்.

*2013 ஆகஸ்டு மாதத்தில் 16 வயது பெண்ணை ஆசாராம் பாப்பு பலாத்காரம் செய்தார் என குற்றச்சாட்டு வெளிவந்தது. அந்த பெண்ணின் உடலில் இருந்து தீய ஆவிகளை வெளியேற்றும் நடவடிக்கையில் தான் ஈடுபட்டதாக ஆசாராம் தெரிவித்தார். இருப்பினும் மருத்துவ பரிசோதனையில் பலாத்காரம் நிறுபிக்கப்பட்டது. அவரை கைது செய்ய காவல்துறை முயன்ற போது அவரை நெருங்க முடியவில்லை. அவரது ஆதரவாளர்கள், பக்தர்கள் காவல்துரையினரை பத்திரிக்கையாளர்களை கடுமையாக தாக்கினர். 2013 செப்டம்பர் மாதம் அவர் கைது செய்யப்பட்டார். இந்தியாவின் உச்ச நீதிமன்றம் அவருக்க்கு ஆயுள் தண்டனை வழங்கியது.

* இந்த தண்டனையில் இருந்து தப்பிக்க எல்லா நாடகங்களையும் ஆடினார் ஆசாராம் பாப்பு. முதலில் இந்த பலாத்கார குற்றச்சாட்டு காங்கிரஸ் கட்சி தனக்கு எதிராக செய்த சதி என்றார் அடுத்த தனக்கு ஆண்மை குறைபாடு இருப்பதாகவும் தன்னால் எந்த பெண்ணையும் பலாத்காரம் செய்ய இயலாது என்றார். அவருக்கு உடன் மருத்துவ பரிசோதனை செய்து இவை எல்லாம் தப்பித்தல் நாடகம் என்பது நிருபனமானது.

*டிசம்பர் 2013ல் ஆசாராம் பாப்புவின் மகன் நாராயன் சாய் சகோதரிகள் இருவரை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். அதில் மூத்த சகோதரி தன்னை ஆசாராம் பாப்பு சில காலம் மோட்ரியா ஆசிரமத்தில் தொடர் பலாத்காரம் செய்தார் என்றும் வாக்குமூலம் அளித்தார். இந்த தங்கைகள் எவ்வாறு ஆசாராம் பாப்புவின் மனைவியும் மகளும் அங்குள்ள பெண்களை எல்லாம் இவர்கள் பலாத்காரம் செய்ய உதவினார்கள் என்பதையும் வெளிப்படையாக பதிவு செய்தார்.

* பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள், மர்மமான முறை கொலை செய்யப்பட்ட மாணவர்கள் என இவர்களின் பெற்றோர் அனைவரையும் தனது மாபியா படை, அரசதிகாரம், காவல்துறையை வைத்து கடுமையாக மிரட்டியுள்ளார்கள். தொலைபேசி மிரட்டல்களின் பதிவுகள் நீதிமன்றங்களில் சமர்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற ஆணையின் படி விசாரனையில் ஈடுபட்ட காவல் துறை அதிகாரிகள் மிரட்டப்பட்டிருக்கிறார்கள்.

*ஆசாராம் பாப்புவிற்கு உலகெங்கிலும் 400க்கும் மேற்பட்ட ஆசிரமங்கள் உள்ளது, பள்ளிகள், கல்லூரிகள் என பல நிறுவனங்களை அவர் நடத்தி வருகிறார்.

*ஆசாராம் பாப்பு இந்த அளவிற்கு வளர்ச்சியடை அவருக்கு போட்டி போட்டு இலவசமாக நிலத்தை வழங்கியுள்ளது காங்கிரஸ் மற்றும் பாஜக அரசுகள், இருப்பினும் ஆசாராம் பாப்பு தன்னை பாஜகவுடன் மிகவும் நெருக்கமாக மாற்றிக்கொண்டார். பாஜக அமைச்சர்களின் பெரும் பணம் இவர் வசம் இருப்பதாக, இவரது ஆசிரமத்தில் பல சந்தேகமான பண பரிவர்த்தனைகள் தொடர்ந்து நடைபெற்றன என்று குற்றச்சாட்டுகள் உள்ளது.

குறிப்பு:
1.இந்த உத்தமபுருஷர் மீதான விசாரனையை எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் ஒத்திப்போட்டு வருகிறது குஜராத் அரசு, நேற்று குஜராத் அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

2. உள்படம் – ஒரு வெளிநாட்டு மாணவிக்கு யோகா கற்றுத்தருகிறார் ஆசாராம் பாப்பு, ஆண்கள் என்றால் தரையிலும், பெண்கள் என்றால் மடியிலும் யோகா கற்றுத்தருவது ஆசாராமின் பழக்கம்..(இதை தவறான கண்ணோட்டத்தில் நீங்கள் பார்த்தல நான் பொருப்பல்ல)

  • Muthu Krishnan

Leave A Reply