சென்னை,
டிடிவி தினகரன் அணியில் உள்ள நாஞ்சில் சம்பத் தமிழகத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கு பாஜகவே காரணம் என்று தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். இதனால் ஆத்திரம் அடைந்த பாஜகவினர் அவரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜகவின் மாநில தலைவர் தமிழிசையை இழிவாகப் பேசியதாக நாஞ்சில் சம்பத் மீது 4 இடங்களில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாஜக நிர்வாகி கொடுத்த புகாரின் பேரில் நாஞ்சில் சம்பத் மீது பல்லாவரம், பம்மல், அம்பத்தூர் எஸ்டேட், பட்டினப்பாக்கம் உள்ளிட்ட 4 காவல்நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை பட்டினப்பாக்கத்தில் நாஞ்சில் சம்பத் வீடு முன்பு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பட்டினப்பாக்கத்தில் உள்ள உணவு விடுதியில் உணவு சாப்பிட்ட நாஞ்சில் சம்பத்தை பாஜகவினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

Leave A Reply

%d bloggers like this: