சென்னை,
ஆன்லைன் விளையாட்டான புளூவேல் கேம்கள் தற்கொலைக்கு தூண்டுவதால் பெற்றோர்கள் மாணவர்களை கவனிக்க வேண்டும் என்று காவல் துறையிறனர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
புளூவேல் சேலஞ்ச் என்னும் ஆன்லைன் விளையாட்டு இளைஞர்களையும்,  மாணவர்களையும் குறி வைத்து அவர்களை தன் வசப்படுத்துகிறது.  இதில் மொத்தம் 50 சவால்கள் உள்ளன.  சிறிது சிறிதாக அதில் சொல்லும் ஒவ்வொரு சவாலையும் செய்ய அவர்கள் துணிந்து விடுகின்றனர்.  சரியாக 4.20 மணிக்கு காலையில் எழ வேண்டும், இருளில் தனிய அமர வேண்டும், பேய்ப்படங்களை தனியே பார்க்க வேண்டும், உடலில் காயங்கள் ஏற்படுத்திக் கொள்ளவேண்டும், கைகளில் அல்லது கால்களில் திமிங்கல உருவத்தை கத்தியால் கீறி வரைய வேண்டும் என்னும் சோதனைகள் இதில் உண்டு.
கடைசியாக தற்கொலைக்கும் தூண்டும் சவாலையும் அந்த விளையாட்டு செய்யச் சொல்கிறது.    இந்த விளையாட்டால் தற்கொலை செய்துக் கொண்ட மாணவர்களின் எண்ணிக்கையும், தற்கொலைக்கு முயன்ற மாணவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகறித்து வருகிறது.
இது குறித்து போலீசார் பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளை குறிப்பாக பதின்ம வயதில் உள்ள மானவர்களை கண்காணிக்கும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாணவர்களை பெற்றோர்கள் அவசியம் கண்காணிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.   இந்த புளுவேல் விளையாட்டை விளையாடுவதை ஆரம்பத்திலேயே பெற்றோர் அவர்களின் குழந்தைகளை கண்கானிப்பதன் மூலம் நிறுத்த முடியும்.
வெகுநேரம் தனிமையில் ஆன்லைனில் இருப்பது, இரவு முழுவதும் இணையத்தை பார்ப்பது, குடும்பத்தினர் அருகில் வருவதையே வெறுப்பது ஆகியவை மாணவர்கள் இந்த விளையாட்டில் முழுகி விட்டதன் முக்கிய அறிகுறி ஆகும்.” என கூறப்படுகிறது.
இது குறித்து ஏற்கனவே பள்ளிகளில் ஆலோசனை வகுப்புகள் நடத்துகின்றன.    அதில் தவறாமல் மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோர்களும் கலந்துக் கொள்ள வேண்டும் எனவும் காவல் துறை கேட்டுக் கொண்டுள்ளது

Leave A Reply