சென்னை,
தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக அரசின் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலைமை வழக்கறிஞராக இருந்த சோனியாஜி ராஜினாமா செய்ததைத்தொடர்ந்து முத்துக்குமார சாமி தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது முத்துக்குமாரசாமி தனது உடல் நிலை காரணமாக தலைமை வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பரபரப்பான தமிழக அரசியல் சூழலில் தலைமை வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி பதவி விலகுவதாக வெளியாகி உள்ள தகவல் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.

Leave A Reply