சென்னை,

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழக அரசின்  உத்தரவு தொடர்பாக சமூக ஆர்வலர் டிரபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் திங்களன்று முறையீடு செய்தார். அதில் அசல் வாகன ஓட்டுநர் உரிமம் எடுப்பதில் சிக்கல்கள் உள்ளதாகவும்,  தாமதம் ஏற்படும் என்பதால் பொதுமக்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தார்.  இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற டிராபிக் ராமசாமியின் கோரிக்கையை ஏற்க மறுத்த உயர்நீதிமன்றம் , வழக்கு எப்போது பட்டியலிடப்படுகிறதோ அப்போது விசாரிக்கப்படும் என கூறி, செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

Leave A Reply