திருநெல்வேலி,

கூடங்குளம் அணு மின் நிலையத்தில் உள்ள முதலாவது பிரிவில் 4 மாதங்களுக்கு பிறகு இன்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது.

கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதலாவது பிரிவில் எரிபொருள் நிரப்பும் பணிக்காக கடந்த ஏப்ரல் மாதம் 13 ஆம் தேதி மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. பணிகள் முடிவடைந்த நிலையில் 4 மாதங்களுக்கு பிறகு இன்று காலை 6.37 மணிக்கு  மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.

அடுத்த 2 நாட்களுக்குள் அதன் மின் உற்பத்தி அளவு 700 மெகாவாட் அளவை எட்டிவிடும் என கூடங்குளம் அணு மின் நிலைய வளாக இயக்குநர் தெரிவித்தார். இதன் மூலம் தமிழகத்திற்கு இன்னும் ஓரிரு நாட்களில் கூடுதலாக 400 மெகாவாட் மின்சாரம் கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அணு உலையில் இருந்து கிடைக்க வாய்ப்புள்ளது.

Leave A Reply