போபால்,

மத்தியப் பிரதேசத்தில் 400 பள்ளிக் குழந்தைகளை காப்பாற்றுவதற்காக வெடிகுண்டை தோலில் தூக்கி கொண்டு ஓடிய தலைமை காவலருக்கு அம்மாநில முதல்வர் ரூ.50,000 பரிசு அளித்துள்ளார்.

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் சிடோரா கிராமத்தில் உள்ள பள்ளி ஒன்றில் கடந்த வெள்ளியன்று 10 கிலோ வெடிகுண்டு புகைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை வெளியே எடுத்தனர். இதைப் பார்த்து அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அப்போது அங்கிருந்த தலைமை காவலர் அபிஷேக் படேல், வெடிகுண்டை தூக்கிக் கொண்டு ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓடி பின்னர் பாதுகாப்பான இடத்தில் அந்த வெடிகுண்டை வைத்துள்ளார். தலைமை காவலர் அபிஷேக் வெடிகுண்டை தூக்கி கொண்டு ஓடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

காவலர் அபிஷேக்-கின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன. இந்த நிலையில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், காவலர் அபிஷேக்-கை பாராட்டி அவருக்கு ரூ. 50,000 பரிசுத் தொகைக்கான காசோலையை வழங்கியுள்ளார்.

Leave A Reply