திருப்பூர்,

காங்கேயம் அருகே உள்ள பஞ்சாலை குடோனில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சாவடிப்பாளையத்தில் மெத்தைகள் மற்றும் வேப்பம் எண்ணெய் ஆலைகள் இயங்கி வருகின்றன. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வரும் நிலையில் இன்று  பஞ்சாலை குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் குடோன் முழுவதும் பற்றி எரிந்த  தீயால்   4 டன் இலவம் பஞ்சு,  தயாரிப்பு இயந்திரம்  உள்ளிட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்கள்  எரிந்து சேதமடைந்தது.

Leave A Reply

%d bloggers like this: