பெங்களூரு,
கர்நாடகாவில்  சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சித்த 2 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
பங்கார்பேட் பகுதியில் உள்ள அரசு பெண்கள் விடுதியில் சிறுமியை பலாத்காரம் செய்ய முயற்சி செய்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து பங்கார்பேட் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் விடுதி பாதுகாவலர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளி தலைமறைவாக உள்ளார். அவரை தேடும் முயற்சியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Leave A Reply