நாடு முழுவதும் இட ஒதுக்கீடு தொடர்பான கொந்தளிப்புகள் ஏற்பட்ட போதிலும் கூட , கடந்த 30 வருடங்களாக நேரடி வரிக்கான மத்திய வாரியத்தின் குழு உறுப்பினராக ஒரு தலித்தோ அல்லது ஒரு பழங்குடியினரோ தேர்ந்தெடுக்கப்படவில்லை என்ற தகவல் தெரிய வந்திருக்கிறது-

வருமான வரி , நேரடி வரி, லெவி போன்ற வரிகளை வசூலிக்க சட்டரீதியான அதிகாரம் கொண்ட நேரடி வரிக்கான மத்திய வாரியத்தில் ஒரு தலைவரும் , 6 உறுப்பினர்களும் உள்ளனர்.

வருவாய் துறை தலைமையகத்தில் உள்ள பதிவுகளின் படி, 1987 முதல் நேரடி வரிக்கான மத்திய வாரிய உறுப்பினர் குழுவில் ஒரு முறை கூட பட்டியலினத்தவர்களோ அல்லது பழங்குடியினர்களோ நியமிக்கப்படவில்லை.இது தொடர்பாக 1987 ஆண்டிற்கு முந்தைய தகவல் ஏதும் இல்லை. இந்த தகவலை வரி முழு , தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நலத்திட்டங்களின் பாராளுமன்றக் குழுவிற்கு எழுத்துப் வடிவில் அளித்துள்ளது.

1980-களின் முற்பகுதியில் மண்டல் கமிஷனின் அறிக்கை அடுத்து, அரசு நிறுவனங்களில் தலித்துகள் மற்றும் பழங்குடியினரின் பிரதிநிதித்துவம் அதிகரித்து , நாடு முழுவதும் உள்ள இட ஒதுக்கீட்டின் முகத்தை மாற்றியது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்கள் பங்களிப்பை அதிகரிக்க அரசு அவ்வப்போது உறுதியான நடவடிக்கை எடுத்து வருகிறது. தனியார் துறை மற்றும் நீதித்துறை போன்ற துறைகளில் அவர்களுக்கான ஒதுக்கீட்டை விரிவுபடுத்துவதற்கான கோரிக்கைகள் உள்ளன.
ஆனால் நேரடி வரிக்கான மத்திய வாரியம் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை.

இது குறித்து நாடாளுமன்ற குழு உறுப்பினர் ஒருவர் கூறுகையில் , இது ஆரோக்கியமான போக்கு அல்ல. பல பொதுத்துறை பிரிவுகள் மற்றும் இதர அரசு ஆணையங்களிலும் கூட இதேபோல் தான் பட்டியலினத்தை சேர்ந்த உறுப்பினர்கள் இல்லாத நிலையே உள்ளது.

மற்றொரு உறுப்பினர் கூறுகையில், பட்டியலினத்தவர்களின் நலன் மற்றும் மேம்பாடு குறித்து மட்டுமே கவனம் செலுத்துகிறோம் . நேரடி வரிக்கான மத்திய வாரியத்தின் வேலை தன்மை பற்றி குழு கவனம் செலுத்துவதில்லை.
மூத்த வருவாய் துறை அதிகாரிகளை தான் நேரடி வரிக்கான மத்திய வாரியத்தின் குழு உறுப்பினராக அரசு தேர்ந்தெடுக்கிறது என வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த அதிகாரிகள் கொண்ட பட்டியலை பணியாளர் பயிற்சி துறை தயார் செய்து கொடுக்கிறது. இந்த பட்டியலின் அடிப்படையில், நிதி துறை மற்ற துறை அதிகாரிகளின் ஆலோசனை பெற்று குழுவிற்கான உறுப்பினர்களை தேர்வு செய்கிறது.

குழுவில் உறுப்பினராக இணைவதற்கு முன்னதாக, அதுவரை அவர்கள் பார்த்த பணியில் இருந்து அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும்.
வருமான வரித்துறை ஆணையர் ஒருவர் கூறுகையில், பட்டியலினத்தவர்கள் பலர் மிகவும் தாமதமாக தான் இந்த பணியில் சேர்கிறார்கள். மூத்த அதிகாரி என்னும் இடத்தை பிடிப்பதற்கு முன்னதாகவே அவர்களின் பணிக் காலம் முடிந்து விடுகிறது. இதன் காரணமாக உயர்மட்ட குழுவிலும் அவர்களால் இடம் பிடிக்க முடிவதில்லை என்றார்.

 

Leave A Reply

%d bloggers like this: