சண்டிகர்,

தேர்தலில் பாஜக-விற்கு ஆதரவு அளித்தால் தண்டனையில் இருந்து காப்பாற்றுவதாக என் தந்தையிடம் செய்து கொண்ட  ஒப்பந்தத்தை பாஜக மீறிவிட்டது என பாலியல் சாமியார் ராம் ரஹீம் சிங்-ன் மகள் ஹனி பிரீத் தெரிவித்துள்ளார்.

அரியானா மாநிலம், சிர்ஸாவில் உள்ள தேரா சச்சா சவுதாவின் தலைமை ஆசிரமத்தைச் சேர்ந்த 2 பெண்களை பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் அவர் குற்றவாளி என்று பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. அவர் கைது செய்யப்பட்டு ரோட்டக்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து திங்களன்று ரோட்டக் சிறையில் அமைக்கப்பட்ட தற்காலிக நீதிமன்றத்தில் தண்டனை வழங்குவதற்கான விசாரணை நடைபெற்றது. விசாரணையை அடுத்து நீதிபதி ஜர்தீப்சிங்  , குல்தீப் ராம் ரஹீம் சிங்கிற்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் , ரூ.30 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்நிலையில் ராம் ரஹீமின் மகள் ஹனி பீரீத், கடந்த அரியானா சட்டமன்ற தேர்தலின் போது மாநில பாஜகவினர் எங்களை அனுகினர். ராம் ரஹீம் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் தண்டனை பெறாமல் இருக்க உதவுவதாகவும் , அதற்கு பிரதிபலனாக தேர்தலில் பாஜக-விற்கு ராம் ரஹிம் ஆதரவு அளிக்க வேண்டும் என கோரினர். அதன்படி கடந்த தேர்தலில் பாஜக-வை ராம் ரஹீம் ஆதரித்தார். இதனால் தான் பாஜக வெற்றி பெற்றது. ஆனால் சொன்னபடி நடக்க பாஜக தவறிவிட்டது என தெரிவித்துள்ளார்.

Leave A Reply