லக்னோ,

உத்தரப் பிரதேசத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த காவலர்கள் இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் காவலர்கள் வாகன சோதனை ஈடுபட்டிருந்த போது, காரில் மறைத்துவைத்து எடுத்து செல்லப்பட்ட ரூ.50 லட்சம் மதிப்பிலான ரூ.500, ரூ.1000 பழைய ரூபாய் நோட்டுகளையும் காரையும் காவலர்கள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரை கைது செய்துள்ள காவலர்கள் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply