நாட்டில் பல கலவரங்களுக்கிடையே *ஆளும் மத்திய அரசு* சத்தமில்லாமல் ஒரு *மிக முக்கிய சீர்திருத்தத்தை , மருத்துவத்துறையில்* மேற்கொண்டுள்ளது, அது என்னவெனில்,
நாடு முழுவதும் உள்ள *மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில்தனியார்கள், அவ்வரசு மருத்தவமனை வளாகத்திற்கிள்ளேயே தனியாக ஒரு மருத்துவமனை தொடங்கி, அம்மருத்தவமனையில், இருதயம்(Cardiology), புற்றுநோய்(Cancer) காசநோய் (TB), ஆகிய மூன்று நோய்களுக்கும் கட்டணம் பெற்று கொண்டு சிகிச்சை அளிக்கலாம்*

அவ்வாறு மருத்துவமனைகள் தனியார் துவங்குவதற்கு *மாநில அரசுகள் வேண்டிய நிதி உதவியினை* செய்ய வேண்டும் என்பதே அச்சீர்திருத்தம் (Reforms)
இத்திட்டம் உடனே பல மாநிலங்களில் அமலுக்கு வந்துவிட்டது, அருகிலுள்ள *ஆந்திரத்தில் APOLLO* என்ற தனியார் மருத்துவமனை 6 மாவட்டங்களில் தன் கிளைகளை துவக்கிவிட்டது. அங்கே *ROTARY CLUB, LION’S CLUB*க்கும் ஒதுக்க வேண்டுமென்ற கோரிக்கைகளை வைத்து அரசை நிர்பந்திக்கின்றனர்,

*இதனால் தரமான மருத்துவ சிகிச்சை* மக்களுக்கு கிடைக்கும் என்று சிலர் நினைக்கலாம், ஆனால் அந்த தரமான சிகிச்சை *காசு உள்ளவர்களுக்கு மட்டும் தான்* என்பதை மறந்துவிடவேண்டாம்.

இத்திட்டம் காலப்போக்கில் *அரசு மருத்துவமனைகளை ஒழித்துகட்டும்* நோக்கத்தில் தான், இந்த மாதிரி ஒரு சீர்திருத்தத்தை *நிதி ஆயோக் (NITI AYOG) மூலம் உலக வர்த்தக மையமும் (WTO) சர்வதேச நிதி மூலதனமும் (IMF)* அமல்படுத்த நிர்பந்தம் செய்தன

இந்த திட்டத்தை நமது *தமிழக அரசு* எப்படி செயல்படுத்தியிருக்கிறது என்றால், நகரங்களிலுள்ள *நகர்புற சுகாதார மையங்களில்* தனியார்கள் *கிளினிக்* வைத்து கொள்ளலாம் என்பதே!
இப்படியொரு *கேடுகெட்ட திட்டத்தை பற்றி எந்தவொரு ஊடகங்களும்* விவாதிக்கவில்லை, என்பது மிகவும் வருத்ததிற்குரியது.

நன்றி –
மருந்து விற்பனை பிரதிநிதிகள் 29வது மாநில மாநாட்டில்
*Dr..G.R.RAVINDRANATH* பேசியது.

– இரவிக்குமார்

Leave A Reply

%d bloggers like this: