காபூல்,

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலியாகினர்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலைப்படை தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலியாகினர்.
இது குறித்து அந்நாட்டு அதிகாரிகள் கூறுகையில், காபூலில் உள்ள தனியார் வங்கியை குறிவைத்து இன்று தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். தாக்குதல் நடத்திய இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் அமெரிக்க தூதரகம் அமைந்துள்ளது. இந்த தாக்குதலில் 5 பேர் பலியாகினர். மேலும் காயமடைந்த 9 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு இது வரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் பொதுவாக மாத இறுதியில் தலிபான் தீவிரவாதிகள் தான் இது போன்று வங்கிகளை குறி வைத்து தாக்குதல் நடத்துவர் என தெரிவித்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.