மகாராஷ்டிராவில் செவ்வாயன்று தூரந்தோ ரயில் தடம்புரண்டு விபத்துக் குள்ளானது. நான்கு நாட்களுக்குள் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்த இரு ரயில் விபத்துகள் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளன. இதுபோன்று நிகழும் விபத்துகள்ரயில் பயணிகள் மத்தியில் பெரும் அச் சத்தை ஏற்படுத்தியுள்ளன. தினமும் 18 மில்லியன் மக்களை கொண்டு செல்லும் இந்திய ரயில்வே உலகின் மூன்றாவது மிகப்பெரிய ரயில்வே. இந்தியாவில் தினமும் 16,000 க்கும் மேற்பட்ட ரயில்கள் ஓடுகின்றன.

பெரும் விபத்துகள்:
இந்தியாவில் கடந்த 12 ஆண்டுகளில்239 ரயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இந்தியாவில் 2003 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி மத்திய அரசு விடுமுறையின் போது பயணித்த கர்வார் – மும்பை ரயில் மகாராஷ்டிரா மாநிலம் வைபவ்வாடி ஸ்டேஷன் அருகே தடம்புரண்டது. இந்த மிகப்பெரும் விபத்தில் 53 பேரின் உயிர்கள் பறிபோகின. 25 பேர் படுகாயமடைந்தனர்.

2010 மே 28 ஆம் தேதி ஜய்னேஸ்வரி எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் 148 பேர் பலியாயினர். ஜூலை 19 -இல் வானன்சால் எக்ஸ்பிரஸ் ரயில் மீது உத்தர் பங்கா எக்ஸ்பிரஸ் மோதியதில் 66 பேர் பலியாகினர். 2011 ஜூலை 10 -இல் மால்வா நிலையம் அருகே கல்கா ரயில் தடம்புரண்டதில் 71 பேர் பலியாகினர். 2012 ஜூன் 30 -இல்தில்லி – சென்னை தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் தீப்பிடித்ததில் 35 பயணிகள் பலி
யாகினர். மேலும் 25க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். 2013 ஆகஸ்ட் 19 -இல் பீகார் மாநிலம் சாஹர்ஷா அருகேராஜ்யராணி எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்ததில் 35 பேர் பலியாகினர். நவம்பர் 27 -இல்பெங்களூரு – நாண்டெட் எக்ஸ்பிரஸ் ரயிலிலிருந்த குளிர்சாதனப் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் 26 பேர் பலியாயினர்.

மேலும் 13 பேர் படுகாயமடைந்தனர். டிசம்பர் 28-இல் நாண்டெட் – பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் ஆனந்தப்பூர் மாவட்டத் தில் கோத்தசேரு ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருக்கும் போது ஏற்பட்ட தீ விபத்தில் 24 பேர் பலியாகினர். 2014 மே 4 – இல் திவா ஜங்சன் – சாவன்த்வாடி பயணிகள் ரயில் தடம்புரண்டதில் 20 பயணிகள் பலியாகினர் . மேலும் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதுதவிர, 2015 பிப்ரவரி 13 ஆம் தேதியிலிருந்து 2016 நவம்பர் 20 ஆம் தேதி வரை இந்தியாவின் வெவ்வேறு இடங்களில் நடைபெற்ற ரயில் விபத்துகளில் மொத்தம் 198 பேரின் உயிர்கள் பறிபோயுள்ளன. 560 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

விபத்துக்கான காரணங்கள்:
பெரும்பாலான ரயில் விபத்துகள் பருவநிலை மாற்றங்களால் நிகழ்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் சரியாக ரயில்தண்டவாளங்களையும் அதன் பாதையை
யும் ஆய்வு செய்யாததே ஆகும். மேலும் சில தண்டவாளங்கள் மிகவும் பழமையானவை. ரயில் அதிக வேகத்திலோ அல்லது சராசரி வேகத்தில் சென்றாலோ அவற்றால் தாக்குப்பிடிக்க முடியாது. ஒரு மணிநேரத்திற்கு 160 கிலோ மீட்டர்பயணிக்கக் கூடிய அளவிற்கு வடிவமைக்கப்பட்டுள்ள ராஜ்தானி – சதாப்தி ரயில்கள்தான் இந்தியாவிலேயே அதிவேகமானவை. ஆனால் இத்தகைய ரயில்களின் அதிவேகத்தை தாங்கக்கூடிய அளவில் இந்தியாவில் உள்ள தண்டவாளங்கள் இல்லை.

ரயில் தண்டவாளங்கள் மரதூபிகளை (wooden sleepers) உள்ளடக்கியவை. அதிவேக ரயில்களில் இந்த தூபிகள் செயல்படுவதில்லை. மேலும் இந்த தண்டவாளங்கள் அழுத்தத்தை எதிர்க்கக்கூடிய ஸ்டைரீன் அல்லது நீடித்து நிலைக்கக் கூடிய செயற்கையிழை பொருட்களால் உருவாக்கப்பட வேண்டும். ஒவ்வொரு தண்டவாளம், பெட்டிகள், என்ஜின், தானியங்கு முறை ஆகியவற்றின் தரம் குறித்து ஒவ்வொரு முறையும் ஒரு முன்வரையறை செய்யப்பட்ட காலத்திட்டத்தின்படி தரமான முறையில் ஆய்வு செய்யப்பட வேண்டும்.

ரயில்கள் தடம் புரள்வது பெரும்பாலும் கோடை மற்றும் குளிர்காலங்களில், அவை செல்லும் தடங்களில் ஏற்படும் விரிவாக்கம் அல்லது சுருக்கங்களால், ரயில்களில் முறிவுகள் ஏற்பட்டு நிகழ்கின்றன. ரயில்வேதுறையில் உள்ள தொழில்நுட்பங்கள் மற்றும் அதற்கு ஒதுக்கப்படும் நிதிகள் ஒருபுறம் இருந்தாலும், தொடர்ந்து தண்டவாளங்களை பராமரிக்காததும், குறைந்த நேரத்தில் அதிகரயில்களை இயக்க வேண்டிய கட்டாயத்தில் ரயில் ஓட்டுநர்கள் இருப்பதாலும் இத்தகைய விபத்துகள் நிகழ்கின்றன.

மற்றொரு காரணம்:
தற்போதுள்ள ரயில் பெட்டிகளில் எதுவுமே புதியவை கிடையாது. துருப்பிடிக் காத இரும்பான லிங்க் ஹாஃப்மேன் பஸ்ச்(Linke Hoffmann Busch (LHB)) பெட்டிகள், ரயில்கள் தடம்புரள்வதை குறைக்கும்அளவிற்கு அதிக திறன் வாய்ந்தவை. பெரும்பாலான இந்திய ரயில்கள் தீயணைப்பு கருவிகளை கொண்டிராதவை. சில நேரங்களில் அக்கருவிகள் குளிர்சாதனம் பொருத்தப்பட்ட பெட்டிகளில் இருக்கும். ஆனால், அதே ரயிலில் உள்ள மற்ற பெட்டிகளில் அக்கருவிகள் இருப்பதில்லை. இது ஒரு மிகப்பெரும் பிரச்சனை. சில நாடுகளில் ரயில் சென்று கொண்டிருக்கும் போது, குறிப்பிட்ட இடத்தில் வந்தவுடன் சிவப்பு விளக்கு எரிந்தால், தானாகவே ரயில் நின்றுவிடும் தொழில்நுட்ப முறைகள் உள்ளன. ஆனால், இந்தியாவில் நிகழும் ரயில் மோதல் விபத்துகளை தவிர்க்க இது போன்ற தொழில்நுட்ப முறைகள் இந்திய
ரயில்வே துறையில் இல்லை.

விபத்துகள் பெரும்பாலும் மனித தவறுகளால்தான் நிகழ்கின்றன. மனிதனின் தவறுகள் நடப்பதற்கு போதிய பணியாளர்கள் இல்லாததும் ஒரு காரணமாகும். இதில் உள்ள குறைவான பணியாளர்களுக்கு அதிக வேலைப்பளு வழங்கப்படுவது மற்றொரு காரணம். இரு ஸ்டேசன்களுக்கு இடையே உள்ள சிக்னல் காட்டும் முறையை மாற்றி, சிக்னல் போடப்பட்டால் ரயில் தானாக நின்றுவிடும் தானியங்கி முறை கொண்டுவரப்பட வேண்டும். இதற்கு மிகப்பெரும் அளவில் பணமும், பராமரிப்பும் தேவைப்படும்.

இந்தியாவில் உள்ள 50,000 ரயில்வே கேட்டுகளில் 15,000 கேட்டுகள் ஆளில்லாரயில்வே கேட்டுகள். சாலையில் செல்வோர் ரயில்வே பாலத்தை கடக்கும்
போது, அதில் சிவப்பு சிக்னல் விழுந்தால், ரயில்வே கேட்டிலிருந்து உடனே குறிப் பிட்ட தூரத்திற்கு முன்னதாகவே வாகனத்தை நிறுத்த வேண்டும். சாலை வாகன ஓட்டிகள் இதுபோன்ற முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததும் விபத்திற்கான மற்றொரு காரணமாகும்.

ஓட்டுநர்களின் தவறுகள்:
அபாய சிக்னல்களை கடப்பது, அதிக வேகம், என்ஜினை முறையாக கையாளாதது, பிரேக் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்யாதது, முறையான நிலையில் ரயிலை நிறுத்த தவறுவது, சிக்னல் போடுபவர்களின் தவறுகள் மற்றும் பராமரிப்புப் பணிகளில் ஈடுபடும் பணியாளர்களின் தவறுகளும் ரயில் விபத்துகளுக்கு முக்கிய வழிவகுக்கும்.

பொக்கிஷம்தானே…
ரயிலில் முதன்முறையாக செல்லும் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மனதில் ஒருவித மகிழ்ச்சி உண்டாகும். அதிலும் இரண்டு, மூன்று நாட்கள் ரயிலில்தான் பயணம் என்றால் அவர்கள் ஒவ்வொரு நாளும் சூரிய உதயத்தையும் கடலையும் கடந்து சென்றால் அலைகளின் அழகையும் ரசித்துக் கொண்டே செல்வர். சிலர் புத்தகங்களை படிப்பர்,உணவு உண்பர், உரையாடிக் கொண்டிருப்பர்.

இப்படி பயணிக்கையில், திடீரென ஒரு பெரும் சத்தத்துடன் கொடூரமாக விபத்து நிகழ்ந்தால், மகிழ்ச்சியாகச் சென்று கொண்டிருந்த அவர்களின் மனநிலை ஒரு விநாடியில் சோகத்திற்கு மாறிவிடும். உயிரை இழந்துவிட்டால், இந்த கொடூர மனநிலை தெரியாது. ஆனால், படுகாயமடைந்து ஊனமாகிவிட்டால், அந்த வலி வாழ்நாள் முழுவதும் மனதை அழுத்திக் கொண்டிருக்கும்.

பிற காரணங்களால் நிகழும் விபத்துகளால், எத்தனை உயிர்கள் பறிபோகின்றன. இந்த சோகம், சிலருக்கு எப்பொழுதுரயிலில் பயணித்தாலும் ஒரு வித அச்சத்தையே ஏற்படுத்துகிறது. வாழ்க்கையில் ஒவ்வொருவரின் உயிரும் பொக்கிஷம்தானே….

(ஆதாரம்: இணையதள தகவல்கள்)

Leave A Reply