இன்றைக்கு அகில இந்திய அளவிலும் தமிழக அளவிலும் விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் கடும் நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர். நாம் நம்முடைய உரிமைகளுக்காகப் தொடர்ந்து போராட வேண்டும். இன்றைக்கு பல சலுகைகள் பறிக்கப்படுகின்றன. மறுக்கப்படுகின்றன. அரசு திட்டமிட்டே விவசாயிகளின் உரிமையையும் விவசாயத் தொழிலாளர்களின் உரிமையையும் பறித்து வருகிறது. விவசாய நிலங்களை பறித்து கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அரசு அளித்துவருகிறது.

தேனி மாவட்டத்தில் மொத்தமுள்ள நிலத்தில் நான்கில் ஒரு பங்கு ஒரு குறிப்பிட்ட 11 பேரிடம் குவிந்துள்ளது. 100 நாள் வேலைத்திட்டத்தை பேரூராட்சி பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டுமென அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் தொடர்ந்து போராடி வருகிறது. இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரள்கின்றனர். இப்படித் திரள்பவர்களில் 35 வயது முதல் 40 வயது வரையுள்ள பெண்களே அதிகம். தமிழகத்தில் மொத்தம் 528 பேரூராட்சிகள் உள்ளன. இதில் ஒரு கோடிப் பேர் வசிக்கின்றனர். இவர்களில் சுமார் 40 லட்சம் பேர் விவசாயத் தொழிலாளர்கள்.

உழைப்பாளி மக்கள் தங்களது போராட்டத்தின் மீது நம்பிக்கையிழக்கச் செய்யும் நடவடிக்கையை மோடி அரசு மேற்கொண்டுவருகிறது. இதற்கெதிரான போராட்டத்தை நாம் தீவிரப்படுத்த வேண்டும்.

விவசாயிகள் விவசாயத் தொழிலாளர்களின் தோழனாகத் திகழவேண்டும்

(அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.லாசர் வாழ்த்துரையிலிருந்து)

Leave A Reply

%d bloggers like this: