லண்டன்,

லண்டனில் நடந்த சாலை விபத்தில் தமிழர்கள் உட்பட 8 பேர் பலியாகினர்.

காஞ்சிபுரம் பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மகன் மனோரஞ்சிதம் லண்டனில் பணியாற்றி வருபவர். அவரை பார்ப்பதற்காக பன்னீர்செல்வமும், அவருடைய மனைவி வள்ளி, தங்கை தமிழ்மணி உட்பட 4 பேர் லண்டன் சென்றனர். பின்னர் அங்கிருந்து சுற்றுலா தலத்திற்கு செல்வதற்காக மினி பேருந்தில் பயணம் செய்தனர். அப்போது ஏற்பட்ட சாலை விபத்தில் பன்னீர்செல்வம், வள்ளி, தமிழ்மணி ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.மேலும் அதே பேருந்தில் பயணம் செய்த கும்பகோணத்தை சேர்ந்த 3 பேரும் பலியாகினர். இதையடுத்து இவர்களது உறவினர்கள் பலியானவர்களின் சடலங்களை இந்தியாவிற்கு கொண்டு வர மத்திய மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Leave A Reply

%d bloggers like this: