கொல்கத்தா,

மேற்கு வங்கத்தில் மாடுகளை வாகனத்தில் ஏற்றி சென்ற இருவர் பசு குண்டர்களால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலம் ஜல்பாய்குரி மாவட்டம் பர்ஹோரியா கிராமத்தில் மாடுகளை ஏற்றி சென்ற வாகனத்தை வழிமறித்த பசு குண்டர்கள் , அதில் இருந்த அன்வர் ஹுசைன் (19) மற்றும் ஹாபிகுல் ஷேக் (19) ஆகிய இருவரை வெளியே இழுத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அப்பகுதி காவலர்கள் இருவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் இருவரும் மருத்துவமனைக்கு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அப்பகுதி முழுவதும் பாதுகாப்பிற்காக காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் கடந்த ஜூன் மாதம் இதே போல் மாடுகளை வாகனத்தில் ஏற்றி சென்ற 3 இளைஞர்கள் பசு குண்டர்களால் அடித்து கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: