சண்டிகர்,
பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட தேரா சச்சா சவுதா தலைவர் பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
தேரா சச்சா சவுதாவின் தலைமை ஆசிரமம் அரியானா மாநிலம், சிர்ஸாவில் உள்ளது. இந்த ஆசிரமத்தைச் சேர்ந்த 2 பெண்களை பாபா குர்மீத் ராம் ரஹீம் சிங் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பான வழக்கில் அவர் குற்றவாளி என்று பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. அவர் கைது செய்யப்பட்டு ரோட்டக்கில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குல்மீத் ராம் ரஹீம் சிங்கின் கைதை கண்டித்து தேரா சச்சா சவுதா ஆதரவாளர்கள் ஹரியாணா, பஞ்சாப் மற்றும் தில்லியில்  கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 38 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று குர்மீத் ராம ரஹீம் சிங்கிற்கு தண்டனை அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து  கலவரம் பரவாமல் தடுக்க அதிகாலை முதலே முன்எச்சரிக்கை நடவடிக்கையாக  செல்போன் இணையதள சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. சிர்ஸா ஆசிரமத்தைச் சுற்றி போலீஸ், ராணுவம் குவிக்கப்பட்டிருக்கிறது. ரோட்டக் சிறையில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மொபைல், இண்டர்நெட், எஸ்எம்எஸ் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று பிற்பகல் பஞ்ச்குலா சிபிஐ நீதிபதி ஜெகதீப் சிங் ஹெலிகாப்டர் மூலம் ரோட்டக் சிறைக்குச் சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டுள்ள தற்காலிக நீதிமன்றத்தில் விசாரணை நடை பெற்றது.
இன்று நடந்த வழக்கு விசாரணையில் குல்மீத்திற்கு அதிக பட்ச தண்டணையாக ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று சிபிஐ தரப்பு தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து நீதிபதி ஜர்தீப்சிங் குல்தீப் ராம் ரஹீம் சிங்கிற்கு  10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

அரியானாவில் வன்முறை

தீர்ப்பு வாசிக்கப்பட்டு வரும் நிலையிலையிலேயே அரியானாவில் வன்முறை பரவதுவங்கியிருக்கிறது. சிர்ஸாவில் குர்மீத் ஆதரவாளர்கள் 2 கார்களுக்கு தீ வைத்துள்ளனர். பல இடங்களில் வன்முற பரவி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. பல இடங்களில் ஏற்கனவே 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. கலவர அபாயம் இருக்கும் இடங்களில் துணை ராணுவத்தினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Leave A Reply

%d bloggers like this: