48 மணிநேரத்துக்கு முன் குண்டாறு அணையில் இருந்தேன். இயற்கை தனது எல்லா வடிவத்திலும் அங்கே குடியேறி உள்ளது. ரேணுவுக்கு கேள்விகேட்பது லட்டு தின்பது மாதிரி. அதுவும் என்னிடம் கேட்பது ரெண்டு லட்டு தின்பது மாதிரி.
“நிறைய படிக்கிறீர்களே, புரியுமா?” – இதுதான் ரேணுவின் கேள்வி.
” புரியாததால் தான் தொடர்ந்து படிக்கிறேன். புரிந்திருந்தால் என்றோ படிப்பதை நிறுத்தி இருப்பேன்” என்றேன்.
“படிக்காதவர்கள் எல்லாரும் எல்லாம் புரிந்தவர்களா?” என்றார். ஆம் என்றேன்.
“படிக்கும்போது என்ன நடக்கும்?” என்றார்.
“தங்கக்கட்டி நகை ஆகும். அறிவு தங்கக்கட்டி மாதிரி. சிலர் அதை அப்படியே வைத்துள்ளார்கள். சிலர் அதை நகையாக்குகிறார்கள். தங்கக்கட்டியை மாற்றுவதுதான் தன்னை அறிதல். ‘தெளிவறியாதவர் தீரார் பிறப்பே’ என்கிறது திருமந்திரம்” என்றேன்.
“தன்னை அறியாமலா உயிர் வாழ்கிறோம்” என்றார்.
“தன்னை அறியாமல் உடல் வாழும். ஆனால்
உயிர் வாழாது” என்றேன்.
“புரியவில்லை” என்றார்.
“படிக்க ஆரம்பி” என்றேன்.
அந்த நேரம் பார்த்து காட்டு காவலர் வந்தார். சொன்னார்: ” அந்தப்பக்கமா போகாதீங்க.. கரடி இருக்கு” என்றார்.
புத்தகங்களைச் சொல்லி இருக்க மாட்டார்.காட்டு அணில் கண் அசைத்தது.

  • Thirumavelan Padikaramu

Leave A Reply