நம்மில் சில பேர் சாமியார் வேலை பார்ப்பதற்கு எந்தத் தகுதியும் தேவையில்லை, நாலு மயிரை தலையிலும், முகத்திலும் நீளமாக வளர்த்துக்கொண்டு ஒரு காவி வேட்டியும் ஒரு திருவோடும் இருந்தால் போதும், சாமியாராகி விடலாம் என்று தப்பாக நினைத்துக் கொண்டு இருக்கின்றார்கள். இப்படி எல்லாம் இருந்தால் கோயில் வாசலில் பிச்சை எடுக்கும் அன்னக்காவடி பிச்சைக்காரனாகத்தான் ஆகமுடியுமே ஒழிய, ஒரு நித்தியானந்தாகவோ, ஆசாரம்பாபுவாகவோ, சங்கராச்சாரியாராகவோ, இல்லை இப்போது ஹரியானா, பஞ்சாப், டெல்லி போன்ற மாநிலங்களை நெருப்புக்காடாக மாற்றிக் கொண்டிருக்கும் குர்மீத் ராம் ரஹீம் சிங் போன்றோ நிச்சயம் ஆக முடியாது.

அதற்கு மேற்குறிப்பட்ட தகுதிகள் மட்டும் போதுமானவை அல்ல. அதற்குக் கொலை, கொள்ளை, மோசடி, யாருக்கும் புரியாமல் பேசும் சாதூர்யம், அப்புறம் இவற்றிக்கு அப்பால் எல்லாவற்றிக்கும் மேல் பெண்களை வலுக்கட்டாயமாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்வதில் பல ஆண்டுகள் எடுத்த கடுமையான பயிற்சி, அப்புறம் தம்முடைய ஆசிரமத்தை அரசியல்வாதிகளுக்கும், அதிகார வர்க்கத்துக்கும் அந்தப்புரமாக மாற்றத் தெரிந்த கலை இவை எல்லாம் ஒருங்கே எவன் கற்றிருக்கின்றானோ, அவன் தான் பாரத தேசத்தில் இந்து மதத்தின் மகோத்மியங்களை பரப்பப் பிறந்த அவதாரம்.

– செ.கார்கி

Keetru Nandhan

Leave a Reply

You must be logged in to post a comment.