சென்னை,

சென்னை கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்கும் போது மின்சார ரயில் மோதியதில் இளைஞர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

சென்னை ரங்கராஜபுரத்தை சேர்ந்த இளைஞர்கள் கார்த்திக், மனோஜ், பிரசாந்த் ஆகிய மூவரும் கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்கும் போது மின்சார ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக தாம்பரம் ரயில்வே காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply