ஈரோடு,ஆக.28-
தேங்கி நிற்கும் சாக்கடை கழிவு நீரை அகற்றக்கோரி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர். பவானி தாலுகா பி.மேட்டுப்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட வ.உ.சி.வீதியில் ஏராளமானோர் வசித்து வருகிறோம். அப்பகுதியில் சேகரமாகும் கழிவு நீர் குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியே செல்ல வழி இல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் அதிக துர்நாற்றம் வீசுவதோடு, அங்கு வசிப்போர் தொற்று நோய் தாக்குலுக்கு உள்ளாகும் அபாயம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, பேரூராட்சி செயல் அலுவலரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும் மழை காலங்களில் மழை நீருடன் சேர்ந்து சாக்கடை நீர் வீடுகளில் புகுந்து விடுகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று அவ்வூர் பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: