சென்னை,
சசிக்கலா மற்றும் தினகரனால் அறிவிக்கப்பட்ட நியமனங்கள் செல்லாது என்று அதிமுக எல்ஏஎம்பிக்கள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துணை முதல்வர் பன்னீர்ச்செல்வம் கலந்து கொண்ட அதிமுகவின் எம்பிகள் மற்றும் எம்எல்ஏக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் அதிமுக தலைமையகத்தில் இன்று காலை  நடை பெற்றது. இந்த கூட்டத்தில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
சசிக்கலா மற்றும் தினகரனை அதிமுகவில் இருந்து ஒதுக்கி வைக்க ஆலோசனைக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதனால் தினகரன் மற்றும் சசிக்கலாவால் அறிவிக்கப்பட்ட நியமனங்கள் செல்லாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பொதுக்குழு மற்றும் செயற் குழுவை விரைவில் கூட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
நமது எம்ஜிஆர், மற்றும் ஜெயா தொலைக்காட்சியையும் அதிமுகவே ஏற்று நடத்த நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: