ஈரோடு,ஆக.28-
கோழிப்பண்ணை மற்றும் கோழி தீவன ஆலையால் ஈ,கொசு, நச்சு பூச்சி உற்பத்தியாவதுடன், துர்நாற்றம் வீசுவதாக கூறி ஈரோடு ஆட்சியர் அலுவலகத்துக்கு முகத்தில் கருப்பு துணி கட்டி பொதுமக்கள் வந்து மனு வழங்கினர். இதுதொடர்பாக, பவானி தாலுகா சலங்கைபாளையம் விராலிமேடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, விராலிமேடு பகுதியில் சாய் கோழிப்பண்ணை மற்றும் கோழி தீவன ஆலையும் செயல்படுகிறது.

இந்த ஆலை, பண்ணையின் கழிவு மற்றும் இறந்த கோழி கழிவுகளை அருகில் உள்ள ஓடை, வாய்காலில் வீசி செல்கின்றனர். இதனால், ஈ, கொசு, விஷ பூச்சிகள் உற்பத்தியாகிறது. கடும் துர்நாற்றமும் வீசுகிறது. இதன்காரணமாக அப்பகுதியில் உள்ளவர்கள் டெங்கு காய்ச்சல், மூச்சு திணறல், ஆஸ்துமா உட்பட பல நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். எனவே, இந்த ஆலைகள் சுகாதாரமாக செயல்படவும், துர்நாற்றத்தை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கக்கோரி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டுள்ளோம். மேலும், இதுதொடர்பாக கடந்த 26 ஆம் தேதி மறியல் பேராட்டமும் நடந்தது. அப்போது, பவானி வட்டாட்சியர் குணசேகரன், கேபி டி.எஸ்.பி., செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே, ஆட்சியர் நேரடியாக தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இம்மனுவினை பெற்றுக்கொண்ட ஆட்சியர் பிரபாகர், குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், சுகாதாரத் துறையினர், உள்ளாட்சி அமைப்பினர், ஆர்.டி.ஓ., ஆகியோரை அழைத்து, அந்த பண்ணைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யுமாறும், அங்கு முழுமையாக ஆய்வு செய்து
அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டார்.

Leave A Reply

%d bloggers like this: