நாட்டின் பிரதான கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐஎம்(இந்திய இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மெண்ட்)ல் இந்தியாவில் உள்ள பல்வேறு பிரிவினரை சேர்க்க மறுக்கும் அநீதி அரங்கேறி வருவது  மாணவர் மற்றும் ஆசிரியர் சேர்க்கையில் அப்பட்டமாக வெளிப்பட்டிருகிறது. குறிப்பாக  தற்போது ஐஐஎம்-மில் பணியாற்றும் 500 ஆசிரியர்களில் இருவர் மட்டுமே பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் எனவும் பெங்களூரு ஐஐஎம்-மில் பணியாற்றும் ஆசிரியர் தீபக் மல்கான் மற்றும் ஆராய்ச்சி மாணவர் சித்தார்த் ஜோஷி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

இது குறித்த தகவலை திங்களன்று நடக்கும் இயக்குநர் கூட்டத்திற்கு முன்னதாக கடிதத்தின் வாயிலாக ஐஐஎம் இயக்குநருக்கு தெரிவித்திருக்கின்றனர்.

இது குறத்து இயக்குநருக்கு  தீபக் மற்றும் சித்தார்த் எழுதியுள்ள கடிதத்தில்,

ஐஐஎம் போன்ற பொது கல்வி நிறுவனத்தில் பின்பற்றப்படும் அரசியலமைப்பு மற்றும் சட்டபூர்வமான விதிமுறைகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம். பல வருடங்களாக மேலாண்மை நிர்வாக படிப்புகளில் மாணவர் சேர்க்கையில் இந்தியாவில் உள்ள பல்வேறு பிரிவினரை சேர்க்க மறுக்கும் அநீதி அரங்கேற்றப்பட்டு வருகிறது.  இதன் நேரடி விளைவாக, ஆசிரியர் சேர்க்கையிலும் இந்த அநீதி நிலவுகிறது என தெரிவித்துள்ளனர்.

தற்போது ஐஐஎம்-மில் ஆசிரியராக பணியாற்றும் மூன்றில் ஒரு பங்கு ஆசிரியர்கள் ஐஐஎம்-மில் பட்டம் பெற்றவர்கள். இதை வைத்து பார்க்கும் பொழுது, ஐஐஎம் -கள் எல்லாம் ஒரு நுகவுர்க்கான இடம் மட்டுமல்ல, திறமையான ஆசிரியர்களை உருவாக்கும் நிறுவனமும் ஆகும்.

தகவல் அறியும் உரிமை சட்டம் , மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திடம் இருந்து பெற்ற தகவல்களை வைத்து இந்த தகவல்களை இருவரும் வெளியிட்டுள்ளனர்.

ஐஐஎம். நிர்வாக மேலாண்மை படிப்பில் சமூகத்தில் உள்ள மற்ற பிரிவினர் சேர்க்கப்படாமல் புறக்கனிக்கப்பட்டு வருவதை  வேடிக்கை பார்க்கும் ஐஐஎம் தலைவர்கள், உள்ளுணர்வுடன் இது தொடர்பான வாதத்தை முன்னெடுத்து மேம்படுத்த வேண்டும். இல்லையேல் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது தொடர்பாக ஆசிரியர் தீபக் கூறுகையில், நம்மிடம் ஒரு பிரச்சனை இருக்கிறது நாம் தெளிவாக ஒப்புக்கொள்ளும் போது நிச்சயமாக அதற்கான தீர்வை பற்றி நாம் யோசிக்க முடியும். தற்போது நிலவி வரும் விதிமுறைகள், ஒரு பொது கல்வி நிறுவனத்திற்கு சட்டபூர்வமானது இல்லை என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறோம். இது சுமார் மூன்று முதல் நான்கு சகாப்தங்களாக ஒரு யானையை ஒரு அறைக்குள் ஒளித்து வைத்தது போல் உள்ளது. தொடர்ச்சியான பிழைகள் மூலம் நாம் தற்போது இந்த இடத்தை அடைந்துள்ளோம். இந்த பிரச்சனையை ஒரு பொது வெளியில் வைத்து விவாதிக்க விரும்புகிறோம். ஒரு பொது கல்வி நிறுவனமான ஐஐஎம் இந்த விவாதத்தில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். என்னுடன் பணிபுரியும் பெரும்பாலான ஆசிரியர்கள் இதற்கு ஆதரவளிக்க மாட்டார்கள். இது, ஐஐஎம் மற்றும் அல்லாமல் மற்ற பெரிய கல்வி நிறுவனங்களை பாதிக்கும் ஒரு சிக்கலான பிரச்சனையாகும். நீண்ட கால அவகாசம் பெற்று உள்ளுணர்வுடன் ஈடுபடும் பொழுது இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றார்.

பட்டியலினத்தவர்கள், பிற்படுத்தப்பட்டோர் அல்லாதவர்கள் பிரிவு ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என கூறி இந்த வருட ஆரம்பத்தில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் அனைத்து ஐஐஎம்-களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.

இந்த பிரச்சனை தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால் இந்த பிரச்சனை ஒரு முடிவிற்கு வரும் என தீபக் மற்றும் சித்தார்த் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: