தில்லி,

உச்சநீதிமன்றத்தின் 45 ஆவது தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா இன்று பதவியேற்றார்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த ஜெகதீஷ் சிங் கேஹரின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து புதிய தலைமை நீதிபதியாக தீபக் மிஸ்ரா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து இன்று காலை தில்லியில், தீபக் மிஸ்ரா உச்சநீதிமன்றத்தின் 45 ஆவது தலைமை நீதிபதியாக பதவியேற்றார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் நரேந்திர மோடி, துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடு, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Leave A Reply