பாக்தாத்,

ஈராக்கில் இன்று நடந்த கார் குண்டு தாக்குதலில் 9 பேர் பலியாகினர்.

ஈராக் தலைநகர் பாக்தாத்தின் கிழக்கு பகுதியில் ஷியா பிரிவு முஸ்லிம்கள் அதிகமாக வாழும் சட்ர் நகரில் உள்ள ஜாமிலா மார்க்கெட் பகுதியில் இன்று காலை வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை வெடிக்க செய்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். காயமடைந்த 25 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.