இந்தியா முழுவதும் இந்தியை கட்டாயமாக்க வேண்டும் என்று மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இந்தி பேசும் மாநிலமான மத்திய பிரதேசத்தில் பொறியியல் படிப்பை இந்தியில் படிக்க முடியாது என நிராகரித்திருக்கிறார்கள். இச்சம்பவம் பாஜக மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்தியப்பிரதேச மாநிலம், போபாலில் ’அடல்பிகாரி வாஜ்பாயி இந்தி பல்கலைக்கழகம்’  தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த ஆண்டு முதல் இந்தி மூலம் பொறியியல் பட்டப்படிப்புகள் கற்பித்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி  மூன்று பொறியியல் பிரிவுகளில் மொத்தம் 180 பட்டப்படிப்புகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டில் இங்கு சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை மொத்தமே நான்கு பேர் மட்டுமே சேர்ந்து பயின்றனர். ஆனால் கல்லுரி நிர்வாகமோ இது முதல் ஆண்டுதானே, அடுத்த ஆண்டு முழு அளவில் மாணவர்கள் வந்து விடுவார்கள் என நிர்வாகம் எதிர்பார்த்து நம்பிக்கையுடன் இருந்தது.

ஆனால் இந்த ஆண்டில் அதுவும் இல்லை! பொறியியலில் டிப்ளமோ படிப்பு முடித்த 11 பேர் மட்டும், நேரடியாக பி.இ. இரண்டாம் ஆண்டில் சேர்ந்துள்ளனர். ஆனால் பி.இ. முதலாம் ஆண்டில் ஒருவர்கூட சேரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த கல்லூரி நிர்வாகம் இந்தி வழி பொறியியல் படிப்பை தொடர்வதா, இழுத்து மூடுவதா ? என்ற குழப்பமான நிலைக்கு சென்றிருக்கிறது. இந்நிலையில் மத்திய பிரதேசதத்தின் தொழில்கல்வித் துறை அமைச்சர் தீபக் ஜோசி, அடல் பிகார் வாஜ்பாயி பல்கலைக்கழகமானது தன்னாட்சி அந்தஸ்து உடையது என்பதால், அதன் நிர்வாகமே இதில் முடிவுசெய்யலாம் என கைவிரித்து விட்டது. இதனால் கூடிய விரைவில் இந்தி வழி பொறியியல் படிப்புக்கள் இழுத்து மூடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave A Reply

%d bloggers like this: