வாஷிங்டன்,

அமெரிக்காவை கடுமையாக தாக்கிய ஹார்வி புயாலால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி 200 இந்திய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரை ஹார்வி புயல் கடுமையாக தாக்கி வருகிறது.  இதில் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் உள்ள 200 இந்திய மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். மீட்பு பணிகளுக்கு படகுகள் தேவைப்பட்டதால், மாணவர்களுக்கு உணவு அளிக்க அமெரிக்க கடற்படை அனுமதியளிக்கவில்லை.  மேலும் மாணவர்கள் ஷாலினி, நிக்கில் பாட்டியா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களது உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தகவலை பெற  ஹூஸ்டனில் உள்ள இந்திய தூரக கவுன்சிலுடன் தொடர்பில் இருக்கிறோம்.  வெள்ளத்தில் சிக்கிய இந்திய மாணவர்கள் 200 பேரை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: