இந்த முறை ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., தரப்பு இணைந்து கொடுத்துள்ள 4 தீர்மானங்கள் குறித்த அறிக்கையின் லெட்டர் பேடில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ( அம்மா, புரட்சித் தலைவி அம்மா ) என்று அச்சிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது…

காரணம் கடந்த முறை டி.டி.வி.தினகரன் நியமனம் செல்லாது என்று அவர்கள் அறிவித்த தீர்மானத்தின் லெட்டர் பேடில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்று மட்டுமே இருந்தது.இதை டி.டி.வி.தினகரன் கேள்வி எழுப்பியிருந்தார். தேர்தல் ஆணையத்தில் இந்த நிமிடம் வரை அதிமுக ., அம்மா, பு.த.அம்மா என்று இரு பிரிவாக இருக்கும் போது இது கூடத் தெரியாமல் ஒரு அறிக்கையை முதலமைச்சர் கொடுத்திருக்கிறார் என்று விமர்சித்திருந்தார்.. அதை இம்முறை கணக்கில் கொண்டே லெட்டர் பேடில் இரு அணிகளின் பெயரும் இடம் பெற்றுள்ளது….

இதில் இருந்து என்ன புரிகிறது என்றால் அதிமுக இரு அணிகளாகவே இன்றும் தேர்தல் ஆணையத்தால் கருதப்படும் நிலையில் அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் இந்த நிமிடம் வரை டி.டி.வி.தினகரன் என்பதையும் ஓ.பி.எஸ்.இ.பி.எஸ்.தரப்பின் அறிக்கை இதை ஒத்துக் கொள்வது போல் இருக்கிறது…எனில், அவரால் நியமிக்கப்படும் நிர்வாகிகளின் நியமனமும் ஏற்புடையது என்றே கருதக் கூடும். …

இவர்கள் பொதுக்குழுவைக் கூட்டினாலும் அதில் பு.த.அம்மா அணியின் நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்களிக்க முடியுமா அவ்வாறு வாக்களித்தால் அது செல்லுமா என்ற பல்வேறு கேள்விகள் எழும்புகின்றன.இந்த இடைப்பட்ட காலத்தில் டி.டி.வி நியமனம் செய்யும் அவரது ஆதரவாளர்களும் பொதுக்குழுவில் கலந்து கொள்வார்கள்…

மேலும் உச்ச நீதிமன்றத்தில் 2007 ல் வழங்கப்பட்ட தீர்ப்பு ஒன்றின் அடிப்படையில், கொறடா உத்தரவுக்கு எதிராக செயல்பட்ட உடனேயே எம்.எல்.ஏக்களின் பதவி பறிபோய் விடுகிறது. எம்.எல்.ஏ.வின் அந்தச் செயலை மன்னிக்கவோ அல்லது தண்டிக்கவோ சபாநாயகருக்கு 15 நாட்கள் கெடு உண்டு. ஆனால் 15 நாட்களைத் தாண்டியும் சபாநாயகர், ஓ.பி.எஸ். மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்பதும் கவனிக்கத் தக்கது..

இது தொடர்பாக டி.டி.வி.தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளதும் கவனிக்க வேண்டிய ஒன்று.. எனில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முரணாக ஓ.பி.எஸ்.துணை முதல்வர் ஆனாரா என்ற கேள்வியை நீதிமன்றத்தில் டி.டி.வி தரப்பு வைக்கும். ஒரு வேளை நீதிமன்றத் தீர்ப்பில் ஓ.பி.எஸ் . மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் பதவி பறிக்கப்பட்டால்…. ஆடு புலி ஆட்டத்தின் ஒவ்வொரு நகர்வும் உன்னிப்பாக கவனிக்க வேண்டியவை…

  • Senthil Vel

Leave A Reply

%d bloggers like this: