கம்பம்;                                                                                                                                                                               தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 29ஆவது மாநில மாநாடு கம்பதில் தோழர் பினாய் கோனார் நினைவு அரங்கில் (கம்பம் என் .நடராஜன் திருமணமண்டபம்),தோழர்கள் இரா.ஞானவாசகம், எம்.செபஸ்தியான் நினைவு வளாகத்தில்  எழுச்சியுடன் தொடங்கியது.

துவக்க நிகழ்ச்சி
மாநாட்டையொட்டி மதுரையிலிருந்து மாநிலச் செயலாளர் ஏ. விஜயமுருகன் தலைமையில் கொண்டுவரப்பட்ட தோழர் கே.பி.ஜானகியம்மாள் நூற்றாண்டு நினைவு ஜோதியை மாநில துணைத்தலைவர் என்.சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார்.
வெண்மணியிலிருந்து மாநில துணைத் தலைவர் சுந்தரமூர்த்தி தலைமையில் கொண்டுவரப்பட்ட தியாகிகள் நினைவு ஜோதியை மாநிலச் செயலாளர் ஆர்.செல்லச்சுவாமி பெற்றுக்கொண்டார்.திருவண்ணாமலையிலிருந்து மாநிலப் பொருளாளர் ஏ.நாகப்பன் தலைமையில் கொண்டுவரப்பட்ட கொடியை மாநிலத்துணைத் தலைவர் தயாநிதி பெற்றுக்கொண்டார்.
பிரதிநிதிகளின் பலத்த கரவொலிக்கிடையே மாநாட்டுக் கொடியை மூத்த தலைவர் ஏ.அப்துல் வஹாப் ஏற்றி வைத்தார். தொடர்ந்து மறைந்த தியாகிகளுக்கு தலைவர்கள் மாநாட்டுப் பிரதிநிதிகள் அஞ்சலி செலுத்தினர்.

தொடக்கவுரை;மாநாட்டிற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார் .வரவேற்புக்குழு தலைவர் கே.ராஜப்பன் பிரதிநிதிகளை வரவேற்றுப் பேசினார். அஞ்சலி தீர்மானத்தை மாநில துணைத்தலைவர் கே.முகமது அலி வாசித்தார். அகில இந்திய துணைத்தலைவர் விஜூ கிருஷ்ணன் மாநாட்டை தொடங்கி வைத்தார்.தொடர்ந்து வேலை அறிக்கையை பொதுச் செயலாளர் பெ.சண்முகமும் , வரவு செலவு அறிக்கையை மாநிலப் பொருளாளர் அ.நாகப்பனும் சமர்ப்பித்தனர். அதனை தொடர்ந்து வேலை அறிக்கையின் மீது பிரதிநிதிகள் விவாதம் தொடங்கியது.மாநாட்டில் அகில இந்திய பொதுச்செயலாளர் ஹன்னன் முல்லா ,அகில இந்திய துணைத்தலைவர் கே.வரதராசன் , விவசாய தொழிலாளர் சங்க அகில இந்திய தலைவர் எஸ்.திருநாவுக்கரசு ,விவசாய தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ .லாசர் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

மாநாட்டில் கவிஞர் நவகவி எழுதிய போர்முனை ஆகுக ஏர்முனை எனும் இசைக்காவியம் நூல் வெளியிடப்பட்டது. அகில இந்திய செயலாளர் ஹன்னன் முல்லா வெளியிட மாநில துணைத் தலைவர் செல்வராஜ் பெற்றுக் கொண்டார்.

விவாதம் – தீர்மானங்கள்
ஆக.28- ஆம் தேதி திங்களன்று அமைப்பு குறித்த விவாதம் நடைபெறுகிறது. தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. மாநாட்டை வாழ்த்தி சங்கத்தின் அகில இந்திய துணைத்தலைவர் கே.வரதராசன், சிஐடியு மாநிலத்தலைவர் அ.சவுந்தரராசன், விவசாயதொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர், பொருளாதார நிபுணர் டாக்டர் வெங்கடேஷ் ஆத்ரேயா ஆகியோர் வாழ்த்திப் பேசுகின்றனர்.

ஆகஸ்ட் 29 ஆம் தேதி செவ்வாயன்று மூன்றாம் நாள் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெறுகிறது. சங்கத்தின் அகில இந்தியப் பொதுச்செயலாளர் ஹன்னன் முல்லா மாநாட்டை நிறைவு செய்து பேசுகிறார் .வரவேற்பு குழு செயலாளர் டி.கண்ணன் நன்றிகூறுகிறார் .

பேரணி-கலைவிழா
செய்வாய்க்கிழமை மாலை 4 மணிக்கு மாநாட்டு அரங்கிலிருந்து உழவர் பேரணி நடைபெறுகிறது. கலைவிழாவை தேசிய விருது பெற்ற ஜோக்கர் திரைப்பட இயக்குநர் ராஜூ முருகன் துவக்கி வைக்கிறார். ‘மதம் எனும் பேய் பிடியாதிருக்க வேண்டும்’ என்ற தலைப்பில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் சு.வெங்கடேசன் ,’எல்லோரும் ஓர் நிறை,எல்லோரும் ஓர் விலை ‘என்ற தலைப்பில் இயக்குநர் பாரதி கிருஷ்ணகுமார் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

நிகழ்வில் புதுகை பூபாளம் ,கரிசல் கருணாநிதி ,சிவகங்கை செம்மலர் கலைக்குழு,தேனி செவக்காட்டு நாடகக்குழு,விருதுநகர் மாணவர்களின் சிலம்பாட்டம் உள்ளிட்ட ஏராளமான கலைநிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன.

பொதுக்கூட்டம் .
மாலை 6 மணியளவில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கேரள மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக், அகில இந்தியப் பொதுச்செயலாளர் ஹன்னன் முல்லா உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்ற உள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: