பாட்னா,

பீகாரில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 440 பேர் உயிழந்துள்ளனர்.

பீகார் மாநிலத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் அண்டை நாடான நேபாளத்தில் இருந்து வரும் வெள்ளத்தினாலும் பீகாரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில் 19 மாவட்டங்களை சேர்ந்த 1.71 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவத்தினர் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலமாக மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை 440 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் பாட்னா, கயா உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் சில தினங்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.