பாட்னா/லக்னோ, ஆக.27-
பீகாரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக 1.71 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியா னோர் எண்ணிக்கை 440 ஆக உயர்ந்துள்ளது. பீகாரில் கடந்த சில வாரங்களாக கனமழை பெய்து வரு கிறது. இதுமட்டுமின்றி அண்டை நாடான நேபாளத்தில் இருந்து வரும் வெள்ளத் தாலும் பீகாரின் பல்வேறு பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. சித்தமர்கி, கதிகார், சாம்பரான் உள்
ளிட்ட 19 மாவட்டங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. இங்கு வசிக்கும் 1.71 கோடி பேர் பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 440 ஆக உயர்ந்துள்ளது.

சாலைகள் சேதமடைந்ததால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளது. உணவுப்பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த பயிர்கள் மூழ்கின. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவத்தினர் மீட்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். படகுகள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு பணி நடைபெற்று வருகிறது. வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி, முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். வெள்ளநிவாரண நிதியாக ரூ.500 கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. பாட்னா, கயா உள்ளிட்ட பகுதிகளில் இன்னும் சில தினங்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உத்தரப் பிரதேசம்:
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 25 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக 25 லட்சம் பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். பல்வேறு பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கி சனிக்கிழமை 7 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, வெள்ளப் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 99ஆக உயர்ந்துவிட்டது. இதுகுறித்து உத்தரப் பிரதேச சுகாதாரத் துறை அமைச்சர் சித்தார்த் நாத் சிங் கூறியதாவது: வெள்ளம் சூழ்ந்துள்ள மாவட்டங்களில் 11.22 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உதவுவதற்காக 984 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. போதுமான அளவுக்கு மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு ள்ளன. மருந்துகளும் கையிருப்பில் உள்ளன என்றார் சித்தார்த் நாத் சிங். அசாம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து பழைய நிலைமைக்குத் திரும்பி வருகின்றன.

மணிப்பூர், மிஸோரம் ஆகிய மாநிலங்களிலும் பலத்த மழை பெய்து வருவதன் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அந்த மாநிலங்களில் சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இமாச்சலப் பிரதேசத்திலும் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. மழைப்பொழிவு செப்டம்பர் 1ஆம் தேதி வரை தொடரும் என்று அந்த மாநில வானி லை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: