ராஞ்சி,

ஜார்க்கண்டில் ஜம்ஷெட்பூர் அரசு மருத்துவமனையில் கடந்த 30 நாட்களில் 52 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்ஷெட்பூர் மகாத்மா காந்தி நினைவு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 30 நாட்களில் 52 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக குழந்தைகள் உயிரிழந்ததாக மருத்துவமனையின் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் உத்தரப் பிரதேசம் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 70-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த நிலையில், தற்போது ஜார்க்கண்டில் 52 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: