ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் காவல்துறை கட்டிடத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர்கள் 8 பேர் பலியாகினர்.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள மாவட்ட காவல் பிரிவு கட்டிடத்தின் உள்ளே நுழைந்த தீவிரவாதிகள் அங்கிருந்த காவலர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் காவலர்கள் தீவிரவாதிகள் மீது பதில் தாக்குதல் நடத்தினர். சனிக்கிழமை காலை முதல் தொடர்ந்து நடந்து வரும் இந்த தாக்குதலில் 4 பாதுகாப்புப்படை வீரர்கள், 4 காவலர்கள் என 8 வீரர்கள் பலியாகினர். 5 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர். மேலும் 2 தீவிரவாதிகளின் சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து, தீவிரவாதிகளுக்கு எதிராக  வீரர்கள் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே, தீவிரவாதிகள் தாக்குதல் தொடர்பாக மத்திய  உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சனியன்று அவசர ஆலோசனை நடத்தினார். இதைத்  தொடர்ந்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், தீவிரவாதிகள்  தாக்குதல் நடத்தி வரும் கட்டிடத்தில் 2 காவலர்கள் உள்ளே சிக்கி உள்ளனர். அவர்களை மீட்க தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: