புதுதில்லி, ஆக.27-
மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் ரூ.1000 மதிப்புள்ள நோட்டுகளில் 99 சதவீதம் திரும்ப பெறப்பட்டதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. மோடி கூறி வந்த கள்ள நோட்டும், கறுப்பு பணமும் எங்கே போய் விட்டன என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது. பண மதிப்பு நீக்கம் அறிவிக்கப் பட்ட போது ரூ.6.86 லட்சம் கோடி மதிப்பிலான ஆயிரம் ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.

இதில் 1.3 சதவீத நோட்டுகள் தவிர மற்றவை ரிசர்வ் வங்கிக்கு திரும்ப வந்துள்ளன. திரும்ப வராத நோட்டுகளின் மதிப்பு 8 ஆயிரத்து 925 கோடி ரூபாய் என தெரியவந்துள்ளது. ஐநூறு ரூபாய் மதிப்பிலான நோட்டுகள் குறித்த எந்த தகவலும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் திரும்பப் பெறப்பட்ட பணம் குறித்த எந்த விவரங்களையும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை. வங்கி அதிகாரிகள் பணத்தை எண்ணி வருகிறார்கள் என்பதாக மட்டுமே மத்திய அரசு கூறி வருவது குறிப்பிடத்தக்கது. 90 சதவீத ஆயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பிய பின்னரும்கள்ளப்பணம், கறுப்பு பணம் எவ்வளவு வந்துள் ளது என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.

Leave A Reply