பெங்களூரு,

கர்நாடக மாநிலம் கோலார் அரசு மருத்துவமனையில் கடந்த ஜனவரி மாதம் முதல்  தற்போது வரை  90 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அறிக்கை அளித்துள்ளது.

கர்நாடக மாநிலம் கோலார் அரசு மருத்துவமனையில் கடந்த வாரத்தில் மட்டும் 3 குழந்தைகள் பிறந்த சில நொடிகளிலேயே உயிரிழந்துள்ளன. இது தொடர்பாக கர்நாடக மாநில சுகாதாரத்துறை அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில்,
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்ட அரசு மருத்துவமனையில் கடந்த ஜனவரி மாதம் முதல் 1053 குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் தற்போது வரை  90 குழந்தைகள் உயிரிழந்ததுள்ளனர். கடந்த வருடமும் இந்த மருத்துவமனையில் 82 குழந்தைகள்ர் உயிரிழந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கர்நாடக மாநில குழந்தைகள் நல வாரிய அதிகாரிகள் இது குறித்து மாநிலம் முதல்வர் சித்தராமையாவிடம் புகார் அளித்தனர். புகாரின் பேரில் முதல்வர் சித்தராமையா, குழந்தைகள் உயிரிழப்பு தொடர்பான விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய சுகாதாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply