பாக்தாத்;
இராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தல் அபார் நகரை அந்த நாட்டு ராணுவம் மீட்டுள்ளது.

இராக்கின் வடமேற்கில் தல் அபார் நகரம் கடந்த 2014-ம் ஆண்டு முதல் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.ஐ.எஸ். வசம் இருந்த மோசூல் நகரம் அண்மையில் மீட்கப்பட்டதைத் தொடர்ந்து இராக் ராணுவத்தின் கவனம் தல் அபார் நகரம் மீது திரும்பியது.

கடந்த சில மாதங்களாக அங்கு ராணுவத்துக்கும் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றது.

நேற்று முன்தினம் தல் அபார் நகரம் ராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டது.

Leave A Reply