எடின்பர்க்,

உலக பேட்மின்ட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய பேட்மின்ட்டன் வீராங்கனை பி.வி.சிந்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.

ஸ்காட்லாந்து நாட்டின் க்ளாஸ்கோவ் நகரில் நடைபெற்று வரும் உலக பேட்மின்ட்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற இந்திய பேட்மிண்ட்டன் வீராங்கனைகள் சாய்னா நேவால் , பி.வி.சிந்து உலக சம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதிக்கு தகுதி பெற்றிருந்தனர். அரையிறுதிப் போட்டியில் சீனாவின் சென் யூஃபி- யுடன்  மோதிய பி.வி.சிந்து 21-13, 21-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

ஜப்பான் வீராங்கனை நோசோமி ஒகுஹரா – வை எதிர்கொண்ட சாய்னா நேவால் 12-21, 21-17, 21-10 என்ற செட் கணக்கில தோல்வியடைந்து வெண்கலப் பதக்கம் வென்றார்.

இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை நோசோமி ஒகுஹாராவுடன் மோதுகிறார். இதில் அவர் வெற்றி பெற்றால், உலகக் கோப்பை பேட்மிண்டனில் வெற்றிபெறும் முதலாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: