சண்டிகர்,

சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என தீர்ப்பு வெளியானதை அடுத்து ஏற்பட்ட வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.

பாலியல் வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என தீர்ப்பு வெளியானதை அடுத்து பஞ்சாப், அரியானா, தில்லி ஆகிய மாநிலங்களில் அவரது ஆதரவாளர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டனர். அரசு அலுவலகங்கள், ரயில் நிலையங்கள், அரசு பேருந்துகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன. இந்த வன்முறையில் 32 பேர் பலியானர். படுகாயமடைந்த 250-க்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இதையடுத்து தேரா சச்சா தலைமையகம் அமைந்துள்ள பகுதியில் ராணுவ வீரர்களும் , பாதுகாப்பு படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 36 தேரா சச்சா மையங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.  வன்முறை தொடர்பாக 524 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: