ராய்பூர்,

அரசு விவசாய கண்காட்சியில் பாரத கிசன் சங் ஒருங்கிணைப்பாளராக இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாயிகளின் வளர்ச்சிக்காவும், அவர்கள் பாதுகாப்பான நிலையான வருமான ஈட்டுவதற்காக சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்பூரில் ’சங்கல்ப் சீ சித்தி’ என்ற பெயரில் ஆகஸ்ட் 26 – 27 ஆகிய இரண்டு நாட்கள் விவசாய கண்காட்சி நடைபெறுகிறது. இந்திரா காந்தி விவசாய பல்கலைக்கழகம், அக்ரிகல்சர் விஜயன் கேந்திரா, பாரதிய கிசன் சங் ஆகியவை இணைந்து இந்த கண்காட்சியை நடத்துகிறது. இந்நிலையில் ஒரு அரசு நிகழ்ச்சிக்கு எவ்வாறு ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் இணைந்த பாரதிய கிசன் சங் ஒருங்கிணைப்பாளராக இருக்க முடியும் என இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 22-க்கும் மேலான விவசாய அமைப்புகள் ஒன்றிணைந்த சத்தீஸ்கர் கிசன் மஸ்தூர் மகாசங் அமைப்பை சேர்ந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து சத்தீஸ்கர் கிசன் மஸ்தூர் மகாசங் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சங்கீத் தாகூர், இது அரசு சார்பில் நடத்தப்படும் நிகழ்ச்சி. இதில் எப்படி ஆர்.எஸ்.எஸ் அமைப்பை பின்புலமாக கொண்ட பாரதிய கிசன் சங் ஒருங்கிணைப்பாளராக எப்படி இருக்க முடியும். இது ஆர்.எஸ்.எஸ் தங்களது சித்தாந்தத்தை விவசாய துறையில் நுழைக்கும்  முயற்சியாகும்.

இந்த கண்காட்சி விவசாயிகள் தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வதற்காகவும், அவர்களது வளர்ச்சிக்காவும் நடத்தப்படுகிறது. இதில் அனைத்து விவசாயிகளும் கலந்துகொள்ளலாம். பாரதிய கிசன் சங் அமைப்பினர் தானாக முன்வந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கொள்ள விருப்பம் தெரிவித்தார்கள். அதனால் அவர்களை சேர்த்துக்கொண்டோம் என பல்கலைக்கழகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் பிராகிதீஷல் கிசன் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் குப்தா, மக்களின் வரி பணத்தில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் பாரதிய கிசன் சங் அமைப்பினர் பங்கேற்பதில் எங்களுக்கு எந்த ஆட்சோபனையும் இல்லை. ஆனால் எப்படி அவர்களை ஒருங்கிணைப்பாளராக நியமித்து மக்களின் வரி பணத்தை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியும் . பாரதிய கிசன் சங் அமைப்பை ஒருங்கிணைப்பாளராக வைத்து இந்த நிகழ்ச்சி தொடர்ந்தால் , கண்டிப்பாக காவல் நிலையத்தில் புகார் அளிப்பேன் என்றார்.

இந்நிகழ்ச்சியை சட்டீஸ்கர் மாநில முதல்வர் ராமன் சிங் துவக்கி வைக்கிறார். விவசாய துறை அமைச்சர் பிரிஜிமோகன் அகர்வால், அதிகாரிகள் மற்றும் மூத்த கட்சி தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: