வாஷிங்டன்,

 அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை இன்று  355 கி.மீ., வேகத்தில் ஹார்வே புயல் தாக்கியது.

அமெரிக்காவின் தென் கிழக்கு பகுதியில் மெக்சிகோ வளைகுடாவில் உருவான ஹார்வே புயல் இந்திய நேரப்படி இன்று காலை 7 மணிக்கு டெக்சாஸ் மாகாணத்தை தாக்கியது. இதன் காரணமாக அப்பகுதியில் 355 கி.மீ., வேகத்தில் காற்று வீசி வருகிறது.  டெக்சாஸை தாக்கியுள்ள புயல், விக்டோரியா நகரம் நோக்கி நகரும் போது பலத்த சேதம் ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 12 அடி உயரத்திற்கு அலைகள் எழும்பும் என்றும்,  97 செ.மீ.மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை மற்றும் சூறைக்காற்று காரணமாக பல இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ள நிலையில், நூற்றுக்கணக்கான மரங்களும் வேருடன் சாய்ந்துள்ளன.பல இடங்களில் மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளன.   இதை தேசிய பேரிடர் ஆக அறிவித்துள்ள அதிபர் டிரம்ப், அடுத்த வாரம் டெக்சாஸ் பகுதிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: