சண்டிகர்;
பாலியல் பலாத்கார வழக்கில் தேரா சச்சா சவுதா ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் (50) குற்றவாளி என்று சிபிஐ நீதிமன்றம் நேற்று பரப்பரப்பான தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை எதிர்த்து பஞ்சாப், ஹரியானாவில் கலவரம் வெடித்தது. பஞ்ச்குலா நீதிமன்ற வளாகம் முன்பு குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் ஆதரவாளர்கள் தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும் வன்முறையில் ஈடுபட்டனர்.

இந்த வன்முறையில் 31 பேர் பலியாயினர். 250-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.வன்முறையை கட்டுப்படுத்த தவறிய பஞ்ச்குலா நகர துணை போலீஸ் ஆணையர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் பலாத்கார வழக்கில் குர்மீத் ராம் ரஹிம் சிங் குற்றவாளி என்று நீதிபதி ஜெகதீப் சிங் தீர்ப்பு வழங்கினார். குர்மீத் ராம் ரஹிம் சிங் தண்டனை விவரம் வரும் 28-ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: