டெல்லி;
ஹரியானாவில் குர்மீத்தின் ஆதரவாளர்கள் வன்முறை காரணமாக உத்தரப்பிரதேசம், டெல்லி உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஹரியானா செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஏராளமான பயணிகள் ரயில் நிலையங்களில் அவதிக்கு உள்ளாகினர்.

இதனால், ஹரியானாவில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களும், பணி நிமித்தமாக அங்கு செல்பவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஹரியானாவில் பேருந்து போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்கின்றனர்.

பொதுமக்களை தீவிர சோதனைக்குப் பிறகே, நகர்ப்பகுதிகளுக்குள் போலீசார் அனுமதிக்கின்றனர்.

Leave A Reply