சண்டிகர்; 
அரசியல் லாபத்திற்காக பஞ்ச்குலாவை தீக்கிரையாக்கிவிட்டதாக ஹரியானா மாநில பாஜக அரசு மீது பஞ்சாப் – ஹரியானா உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
போராட்டக்காரர்களிடம் மனோகர் லால் கட்டா தலைமையிலான பாஜக அரசு சரண் அடைந்துவிட்டது என்றும் உயர் நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.

பாலியல் வல்லுறவு வழக்கில், சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங் மீது, ஆகஸ்ட் 25-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று சிபிஐ நீதிமன்றம் கூறியிருந்தது. இதனால், ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே, சாமியார் குர்மீத்தின் பக்தர்கள் பஞ்ச்குலாவில் குவியத் தொடங்கினர்.

ஆனால் ஹரியானா மாநில பாஜக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தொடங்கவில்லை. இதுதொடர்பாக புதன்கிழமையன்றே ஹரியானா அரசை உயர் நீதிமன்றம் கடுமையாக கண்டித்தது. இவ்வளவு ஆதரவாளர்களை குவியவிட்டது ஏன்? கேள்வியை எழுப்பியது.

சிபிஐ நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து வன்முறை வெடித்ததும், பஞ்சாப், ஹரியானா ஆகிய இரண்டு மாநில அரசுக்களுக்கும் கண்டனம் தெரிவித்த உயர் நீதிமன்றம், வன்முறையின்போது சேதப்படுத்தப்பட்ட பொதுச்சொத்துக்களுக்கான இழப்பீட்டை, சாமியார் குர்மீத் சிங்கிடமிருந்தே வசூலிக்க உத்தரவிட்டது; குர்மீத்தின் சொத்துக்களை முடக்கவும் உத்தரவிட்டது.

இந்நிலையிலேயே, “அரசியல் லாபத்திற்காக பஞ்ச்குலாவை பற்றிய எரிய நீங்கள் ( மாநில பாஜக அரசு) அனுமதித்து உள்ளீர்கள்; போராட்டக்காரர்களிடம் ஹரியானா அரசு சரண் அடைந்துவிட்டது” என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

 

Leave A Reply